2023-2025 இந்திய பெருங்கடல் சங்கத்தின் தலைமை பொறுப்பை இலங்கை ஏற்பு
2023-09-07 15:05:49

வரும் அக்டோபர் மாதத்தில் இந்திய பெருங்கடல் சங்கத்தின் 23ஆவது அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தை இலங்கை நடத்தவுள்ளது. அப்போது, 2023முதல் 2025ஆம் ஆண்டு வரை இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

2003 மற்றும் 2004ஆம் ஆண்டில் இந்திய பெருங்கடல் சங்கத்தின் தலைமை பொறுப்பை இலங்கை ஏற்ற பிறகு, தற்போது 2ஆவது முறையாக இப்பொறுப்பேற்கவுள்ளது. பிராந்திய பொருளாதார ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது, தொடரவல்ல வளர்ச்சியை ஊக்குவிப்பது, கடல் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை வலுப்படுத்துவது ஆகியவை இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்திய பெருங்கடலின் அடையாளத்தை உயர்த்திப் பிராந்திய கட்டமைப்பை வலுப்படுத்துவதைத் அதன் தலைமை பொறுப்புக்கான தலைப்பாக இலங்கை தீர்மானித்துள்ளது.