சீனாவில் நபர்வாரி மின் நுகர்வு அளவு: 6116 கிலோவாட்டு
2023-09-07 15:17:59

எரியாற்றல் மாற்றம் பற்றிய 2023ஆம் ஆண்டு சர்வதேச மன்றக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 2022ஆம் ஆண்டில், உலகளவில் மிகப் பெரிய மின்சார வினியோக அமைப்புமுறை மற்றும் தூய்மையான மின் உற்பத்தி கட்டமைப்பை சீனா உருவாக்கியுள்ளது. அதற்குப் பிறகு, சீனாவில் நபர்வாரி மின் நுகர்வு அளவு, 2012ஆண்டில் இருந்த 3919 கிலோவாட்டிலிருந்து 6116 கிலோவாட்டாக உயர்ந்து, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளைத் தாண்டி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் அளவை நெருங்கியுள்ளது.

தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, ஜூலை திங்கள் இறுதி வரை, இவ்வாண்டில் சீனாவில் மின் உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 274 கோடி கிலோவாட்டை எட்டியுள்ளது.