லெபனானின் ஐனல்-ஹில்வே பாலஸ்தீன அகதிகள் முகாமில் நிகழ்ந்த மோதல்
2023-09-08 19:27:15

லெபனானின் தென் பகுதியின் ஐனல்-ஹில்வே பாலஸ்தீன அகதிகள் முகாமில் செப்டம்பர் 8ஆம் நாள் அதிகாலை மோதல் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 6 பேர் காயமுற்றனர் என்று லெபனான் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஐனல்-ஹில்வே அகதிகள் முகாம், லெபனானின் மிகப் பெரிய அகதிகள் முகாமாகும். ஜூலை இறுதி முதல் இதுவரை, இந்த முகாமில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் துப்பாக்கி சண்டைகளில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பத்து பேர் காயமுற்றனர்.