சீன நிறுவனத்தைத் தாக்கிய அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2023-09-08 18:50:22

சீனாவின் ஹுவாவெய் நிறுவனம் தயாரித்த புதிய ரக தொலைப்பேசி சில்லுவின் மீது அமெரிக்க அரசு புலனாய்வு செய்கின்றது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 8ஆம் நாள் கூறுகையில், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்களை அரசியல் மயமாக்குவதை சீனா எப்போதுமே எதிர்த்து வருகிறது. அமெரிக்கா சீனத் தொழில் நிறுவனங்களை நியாயமற்ற முறையில் தாக்குவது, சுதந்திர வரத்தக கோட்பாடு மற்றும் சர்வதேசப் பொருளாதார வர்த்தக விதிமுறையை மீறி, உலக தொழில் மற்றும் வினியோகச் சங்கிலியின் நிலைப்புத் தன்மையைச் சீர்க்குலைத்துள்ளது. ஆனால், தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்ய முடியாது. அதற்கு மாறாக, சீனாவின் தற்சார்ப்பு, சுய வலிமை மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான மனவுறுதியை இது வலுப்படுத்தும் என்றார்.