ஹாங்சோ 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீப தொடரோட்டம் இன்று துவக்கம்
2023-09-08 10:55:29

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீப தொடரோட்டம் 8ஆம் நாள் சீனாவின் ஹாங்சோ நகரில் துவங்கியது. முதல் நாளில் முன்மாதிரிப் பணியாளர்கள், புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், ஜெய்ஜியாங் மாநிலத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் என பல்வேறு துறையினைச் சேர்ந்த 106 நபர்கள் தீபங்களை ஏந்திக் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹாங்சோ நகருக்கு அடுத்தபடியாக, தீபத் தொடரோட்டம் ஜெய்ஜியாங் மாநிலத்தின் 11 நகரங்களில் துவங்கவுள்ளது. செப்டம்பர் 20ஆம் நாள் அது மீண்டும் ஹாங்சோவுக்குத் திரும்பி நிறைவேற்றப்படும்.