லீச்சியாங் ஐ.நா. தலைமைச் செயலாளருடன் சந்திப்பு
2023-09-08 11:33:15

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் 7ஆம் நாள் ஜகார்த்தாவில் ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரேஸைச் சந்தித்துரையாடினார்.

அப்போது லீச்சியாங் கூறுகையில், தற்போதைய சர்வதேச சூழலில் மாற்றங்களும் மோதல்களும் நிலவி வருகின்றன. இந்த அறைகூவல்களைச் சமாளிக்க, சர்வதேசச் சமூகம் மேலும் ஒற்றுமையான ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். அதோடு, சர்வதேச விவகாரங்களில் ஐ.நா.வின் மையப் பங்களிப்பிற்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 

பின்னர் பேசிய குட்ரேஸ், சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் சீனா முக்கிய பங்காற்றி வருவதற்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும், சர்வதேசப் பொருளாதார ஆட்சி முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களைச் சமாளிப்பதில் வளரும் நாடுகளுக்கு உதவியளிப்பது, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நனவாக்குவதை முன்னேற்றுவது ஆகியவற்றில், சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஐ.நா. விரும்புவதாகவும் குட்ரேஸ் தெரிவித்தார்.