சீனாவின் வடக்கிழக்குப் பகுதி-ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியின் ஒத்துழைப்பு
2023-09-08 18:48:24

சீன துணைத் தலைமை அமைச்சர் சாங் குவோசிங், ரஷியாவில் நடைபெறும் 8ஆவது கிழக்கு பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் தலைமையில், இரு நாட்டுறவு உயர் நிலையில் வளர்ந்து வருகின்றது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகள் சீராக முன்னேறி வருகின்றன. இக்கருத்தரங்கு, ஆசிய-பசிபிக் நாடுகள், ஒத்துழைப்புக்கான ஒத்த கருத்தை எட்டி, வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய மேடையாகும். இப்பணயத்தின் மூலம், ரஷியாவுடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் பொது கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சீனாவின் வடக்கிழக்குப் பகுதிக்கும் ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதிக்குமிடையிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புகின்றது என்றார்.