ஜெர்மனின் பொருளாதார வீழ்ச்சி
2023-09-08 15:37:32

ஜெர்மன் கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் செப்டம்பர் 6ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஜூலைத் திங்களில் ஜெர்மனியின் தொழில் துறையில் பெறப்பட்டுள்ள புதிய முன்பதிவுளின் எண்ணிக்கை ஜூன் திங்களை விட 11.7 விழுக்காடு குறைந்துள்ளது. இது 2020ஆம் ஆண்டின் மே திங்களுக்குப் பிந்தைய மிகப்பெரிய சரிவாகும்.

ஜெர்மன் மத்திய பொருளாதார மற்றும் காலநிலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, தொழில்துறை சார் முன்பதிவு எண்ணிக்கை கடும் சரிவைச் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.  இதனிடையில் வணிகச் சூழலின் நிலையற்ற தன்மை, பலவீனமான உலகப் பொருளாதாரம் ஆகிய காரணங்களாக, அந்நாட்டின் தொழில்துறை சார் பொருளாதாரம் தொடர்ந்து மீள முடியுமா என்பது உறுதி செய்யப்பட்டவில்லை.

அதோடு, ஜெர்மன் பொருளாதார மந்தநிலையின் ஆபத்து அதிகரித்து வருவதாக பல ஆராய்ச்சி நிறுவனங்கள் கருதுகின்றன. ஜெர்மனின் புகழ்பெற்ற சிந்தனை கிடங்குமான கீல் உலக பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் செப்டம்பர் 6 ஆம் நாள் வெளியிட்ட இலையுதிர்க்கால முன்னறிவிப்பு அறிக்கையின் படி, இவ்வாண்டு ஜெர்மனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 0.5 விழுக்காடு குறைவாகும்.

இதனிடையில், ஜெர்மனிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்த ஆண்டு ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 0.5% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி விகிதங்கள், உயரும் எரிசக்தி விலைகள் மற்றும் பலவீனமான ஏற்றுமதி போன்ற காரணிகளால் ஜெர்மன் பொருளாதாரம் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.