உலக உணவு விலை குறைப்பு
2023-09-08 19:25:40

ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 8ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் திங்களில், அரிசி, சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்த உணவுகளின் விலை குறைந்துள்ளது. ஆகஸ்ட் திங்களில், உலக உணவு விலை குறியீடு 121.4 ஆகும். இது, ஜுலை திங்களில் இருந்ததை விட 2.1 விழுக்காடு குறைவு. 2022ஆம் ஆண்டு மார்ச் திங்களிலிருந்த உச்ச நிலையை விட 24 விழுக்காடு குறைவு.

மேலும், இவ்வமைப்பு அன்று வெளியிட்ட நவ தானியங்கள் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் நவ தானியங்களின் உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட 0.9 விழுக்காடு அதிகரிக்கும் என்பது மதிப்பிடத்தக்கது.