10ஆவது சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்
2023-09-09 16:09:19

10ஆவது சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு மன்றக் கூட்டம் செப்டம்பர் 9ஆம் நாள் சீனாவின் ஃபூஜியன் மாநிலத்தின் சியாமென் நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு மன்றம் நிறுவப்பட்டதிலிருந்து அதன் அளவும் செல்வாக்கும் விரிவாகி வருகிறது. இம்மன்றத்தின் மூலம் சீனா 5 மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, வளர்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வருகிறது. இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வையும் பாரம்பரிய நட்புறவையும் அதிகரித்துள்ளன என்று ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமான முன்மொழிவு வழங்கப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். இது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பு சர்வதேச சமூகத்தின் முன்னணியில் உள்ளது. புதிய நிலைமையில் சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பு அதிக வாய்ப்புகளை வரவேற்று, பெரும் சாதனைகளைப் பெறும். பல்வேறு தரப்புகள் நடப்பு மன்றக் கூட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு, இருதரப்பு உறவின் வளர்ச்சியில் மேலதிக சாதனைகளைப் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.