18ஆவது ஜி20 உச்சிமாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் லீ ச்சியாங் உரை
2023-09-09 19:21:58

சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 9ஆம் நாள் முற்பகல் இந்தியாவின் புது தில்லியில் ஜி20 அமைப்பின் 18ஆவது உச்சிமாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு, உலகளாவிய நாகரிக முன்னெடுப்பு ஆகியவற்றை முன்வைத்துள்ளார். பெரும் நெருக்கடி மற்றும் பொது சவால்களை நோக்கி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு தான், சரியான வழியாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் ஆரம்ப குறிக்கோளைக் கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும். மேலும், சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, திறப்பை விரிவாக்குவது, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது, சீனாவின் நவீனமயமாக்கத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றில் சீனா நிலைத்து நிற்கும் என்றும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, மனிதகுலத்தின் பொதுவான பூமி, தாயகம் மற்றும் எதிர்காலத்துக்கு மேலும் பெரும் முயற்சியுடன் மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.