வட கொரிய தலைவருடன் சீனத் துணை தலைமை அமைச்சர் சந்திப்பு
2023-09-10 20:22:24

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான லியூ குவோசொங், சீன பிரதிநிதி குழு ஒன்றுக்குத் தலைமை தாங்கி, செப்டம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை வட கொரியாவின் 75ஆவது தேசிய விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின்போது, வட கொரிய தொழிலாளர் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜொங் உன் பியோங்யாங்கில் லியூ குவோசொங்குடன் சந்திப்பு நடத்தி, இருநாட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

கிம் ஜொங் உன்னுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வணக்கத்தை லியூ குவோசொங் தெரிவித்ததோடு, சீன-வட கொரிய பாரம்பரிய நட்புறவுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, இவ்வுறவின் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இருநாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.