மொரோக்கோ நிலநடுக்கம்:சீனா அவசர நிதியுதவி
2023-09-10 17:02:55

மொரோக்கோவில் செப்டம்பர் 8ஆம் நாளிரவு நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் இதுவரை 2012 பேர் உயிரிழந்தனர். 2059 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் 9ஆம் நாளிரவு தெரிவித்தது.

அந்நாட்டின் மீட்புப் பணிக்கு ஆதரவளிக்க, சீன செஞ்சிலுவை சங்கம் மொரோக்கோ செம்பிறைச் சங்கத்துக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவசர மனித நேய உதவியை வழங்க உள்ளது.

சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு வெய் கூறுகையில், இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புக்கு சீனா ஆறுதலைத் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள மக்களின் தேவைக்கிணங்க அவசர மனித நேய உதவியை சீனா வழங்கும் என்றார்.