ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் லீ ச்சியாங் உரை
2023-09-10 17:13:17

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 10ஆம் நாள் இந்தியாவில் நடைபெற்ற 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டின் 3வது கட்டக் கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்மாதிரியாகப் பங்காற்ற வேண்டும். வளர்ச்சி விவகாரத்தை, ஒட்டுமொத்த கொள்கையின் மைய இடத்தில் வைத்து, வறுமை ஒழிப்பு, நிதி திரட்டல், காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை வளரும் நாடுகள் சமாளிப்பதற்குப் பயன்தரும் முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்தி, உலக வளர்ச்சிக் கூட்டுறவை வகுத்து, கூட்டு வளர்ச்சிக்குப் பாதுகாப்பான மற்றும் நிதானமான சர்வதேச சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.