ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வருகை மற்றும் புறப்பாட்டு சேவை இயக்கம்
2023-09-10 16:24:38

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வருகை மற்றும் புறப்பாட்டு சேவை செப்டம்பர் 9ஆம் நாள் இயங்கத் துவங்கியது. சீனாவின் ஹாங்காங் பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த 3 பேர் அன்று பிற்பகல் ஹாங்சோ நகரத்தின் சியௌஷான் சர்வதேச விமான நிலையத்தை அடைந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு வழியின் மூலம் சுங்க நடைமுறைகளை நிறைவேற்றினர்.

இப்போட்டிக்கான வருகை மற்றும் புறப்பாட்டு நிர்வாக அமைப்புமுறையின்படி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 40க்கும் மேலானோர் 9ஆம் நாள், ஹாங்சோ, நிங்போ, ஷாங்காய் உள்ளிட்ட நுழைவாயில்களை வந்தடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.