வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சிக்கு சீனாவின் முயற்சிகள்
2023-09-10 19:37:32

வட கிழக்கு சீனாவிலுள்ள ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, புதிய யுகத்தில் வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, இவ்வளர்ச்சிக்கான திசை மற்றும் வழிமுறையை வழங்கினார்.

நவ சீனாவின் தொழில்துறை தொட்டில் மற்றும் தளமாகவும், உணவுப் பாதுக்காப்புக்கான நங்கூரமாகவும் வட கிழக்குப் பகுதி திகழ்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களையும், தரை, ஆறு மற்றும் கடல் வழி மேம்பாடுகளையும் கொண்ட இப்பகுதி, சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய ஜன்னல்களிலும் ஒன்றாகும்.

கடந்த நூற்றாண்டின் 90ஆவது ஆண்டுகளிலிருந்து மந்தமான வளர்ச்சியைக் கண்டு ஓரளவு பின்தங்கிய நிலையில் சிக்கியிருந்த இப்பகுதி, உள்ளார்ந்த ஆற்றலையும் கொண்டுள்ளது.

வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சிக்குத் திட்டம் தீட்டும் விதம், கடந்த 10 ஆண்டுகளில் ஷி ச்சின்பிங் அங்கே 10 முறை சென்றுள்ளார். தற்போது சீனாவின் நவீனமயமாக்கத்துடன் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை முன்னேற்றி வருகிறது. இதற்கு வட கிழக்குப் பகுதியின் ஆதாரப் பங்கை வலுப்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

வட கிழக்குப் பகுதியின் பன்முக வளர்ச்சிக்கு, உண்மை பொருளாதாரம் அடிப்படையாகவும், அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் திறவுகோலாகவும், தொழில் நிலை உயர்வு திசையாகவும் உள்ளது. இதுவும், ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய சித்தரிப்பாகும். வட கிழக்குப் பகுதியின் நவீன தொழில் முறைமையைக் கட்டமைப்பது, வேளாண் துறை மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது, நவீன உள்கட்டமைப்பின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது முதலியவற்றுக்கு அவர் ஏற்பாடுகளை வழங்கினார்.

வட கிழக்குப் பகுதியின் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு நிலையை உயர்த்துவதையும், மக்களின் ஒட்டுமொத்த அறிவுத் திறனை உயர்த்துவதையும் அவர் வலியுறுத்தினார்.