புதுதில்லியில் ஜி20 உச்சிமாநாடு நிறைவு
2023-09-10 17:12:18

18ஆவது ஜி20 உச்சிமாநாடு செப்டம்பர் 10ஆம் நாள் முற்பகல் புதுதில்லியில் நிறைவடைந்தது.

2 நாட்களில் 3 கட்டங்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜி20 தலைவர்களின் புதுதில்லி உச்சிமாநாட்டின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜி20 உச்சிமாநாடு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முக்கிய மன்றமாகும். எதிர்காலத்தில் பலதரப்புவாதத்துடன் ஒத்த கருத்தை அடிப்படையாகக் கொண்டுச் செயல்படுவதாகவும், உலகளாவிய சவால்களைச் சமாளிக்கும் விதம் அனைத்து உறுப்பு நாடுகளும் உச்சிமாநாடு உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமமாக கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவதாகவும் இவ்வறிக்கையில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இம்மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் பிரேசில் ஜி20 அமைப்பின் புதிய தலைவர் நாடாக பதவியேற்றது. அடுத்த உச்சிமாநாடு 2024ஆம் ஆண்டின் பிற்பாதியில் அந்நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ளது.