சீரான வணிகச் சூழ்நிலையுடன் முதலீட்டை ஈர்க்கும் திபெத்
2023-09-10 19:12:42

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, 3432 கோடி யுவான் மதிப்பிலான நடைமுறை முதலீட்டுடன், 740 முதலீட்டுத் திட்டங்களில் கையொப்பமிட்டுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

முதல் 7 மாதங்களில், நிலையான சொத்துக்களுக்கான திபெத்தின் முதலீடு சுமார் 1972 கோடி யுவானை எட்டியது. இதன் மூலம், இப்பிரதேசத்திலுள்ள 7997 மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதோடு, 8 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரம் யுவான் தொழிலாளர் வருமானமும் பெறப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் தனது வணிகச் சூழலை திபெத் மேம்படுத்தி, சலுகையுடன் கூடிய முதலீட்டுக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்று இப்பிரதேச வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் முதலீட்டு முன்னேற்றப் பணியகம் தெரிவித்தது.