ஸ்விஃப்ட் வங்கி முறைக்குத் திரும்ப கூடும் ரஷிய வங்கி
2023-09-11 14:55:33

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ், ஆகஸ்ட் 28ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சர் ராப்ரோபுக்கு செய்தி அனுப்பினார்.

இச்செய்தியில் அவர் கூறுகையில்,

30 நாட்களில் ஸ்விஃப்ட் வங்கி முறையை இணைக்கும் வகையில், லக்சம்பர்கிலுள்ள ரஷிய வேளாண் வங்கியின் கிளை நிறுவனம், இவ்வங்கி முறைக்கு விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம் என்றார்.

ரஷிய வேளாண் துறை வங்கி மறைமுகமாக ஸ்விஃப்ட் வங்கி முறைக்குத் திரும்பலாம் என்பதை இது வெளிகாட்டியது.

ஆனால், அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஷிய வெளியுறவு அமைச்சகம், ஐ.நாவின் முன்மொழிவுக்கு ஐயம் தெரிவித்தது. ஐ.நாவின் முன்மொழிவு குறித்து ஸ்விஃப்ட் வங்கி முறை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.