தியன்சோ-5 சரக்கு விண்கலம் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிதல்
2023-09-11 19:07:10

தியன்சோ-5 சரக்கு விண்கலம் திட்டமிட்ட கடமைகளை நிறைவேற்றிய பிறகு, செப்டம்பர் 11ஆம் நாள் பிற்பகல் 4:46 மணியில் விண்வெளி நிலைய இணைப்பிலிருந்து பிரிந்து, தனியாக இயங்கத் தொடங்கியதாக, சீன மனித விண்வெளிப் பயண நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவலின் மூலம் தெரிய வந்தது.

இந்த விண்கலம் 12ஆம் நாள் கட்டுப்பாட்டின் கீழ் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைய உள்ளது. இப்போக்கில் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விடும். சிறு அளவு சிதிலங்கள் மட்டுமே தெற்கு பசிபிக் பெருங்கடலில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான பகுதியில் விழும் என்று இந்நிறுவனம் தெரிவித்தது.