2023ஆம் ஆண்டு சீன இணைய பாதுகாப்புக் கண்காட்சி துவக்கம்
2023-09-11 11:29:07

செப்டம்பர் 11முதல் 17ஆம் நாள் வரை சீனத் தேசிய இணைய பாதுகாப்புக்கான பரப்புரை வாரம் ஆகும். இவ்வாரத்தின் முக்கிய பகுதியான இணைய பாதுகாப்புக் கண்காட்சி 10ஆம் நாள் ஃபுஜியேன் மாநிலத்தின் ஃபுச்சோ நகரில் நடைபெற்றது. பெரிய செயற்கை நுண்ணறிவு மாதிரிப் பொருட்கள், இணைய பாதுகாப்பில் நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் புதிய செயலிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

20ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவான இக்கண்காட்சியில், முக்கிய தகவலுக்கான அடிப்படை வசதிகளின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, தனிநபர் தகவல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் சேவை முதலிய காட்சியிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.