சீனாவில் புதிய எரியாற்றல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு
2023-09-11 16:52:35

சீன வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் செப்டம்பர் 11ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி 54.34 லட்சத்தையும் விற்பனை 53.74 லட்சத்தையும் எட்டி, முறையே 36.9 விழுக்காடு மற்றும் 39.2 விழுக்காடு அதிகரித்தன. மேலும், இந்த வாகனங்களின் சந்தைப் பங்கு 29.5 விழுக்காட்டை எட்டியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, முறையே 8.43 லட்சம் மற்றும் 8.46 லட்சத்தை எட்டி, 22 விழுக்காடு மற்றும் 27 விழுக்காடு அதிகரிப்பைக் கண்டன. புதிய எரியாற்றல் வாகனத் தொழில் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி வருவதை இது காட்டியுள்ளது.