நைஜரில் நிறுத்தப்பட்டுள்ள பிரஞ்சு படையின் சரிப்பாடு
2023-09-11 14:44:44

நைஜரில் நிறுத்தப்பட்டுள்ள பிரஞ்சு படையைச் சரிப்படுத்த வேண்டுமானால், நைஜரில் சட்டத்தால் அங்கீகரிக்கப்படும் அரசுடன் விவாதிக்கலாம் என்றும், ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய ராணுவப் படையினருடன் பிரான்ஸ் விவாதிக்கப்போவதில்லை என்றும், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் 10ஆம் நாள் புதுதில்லியில் தெரிவித்தாக பிரஞ்சு செய்தி ஊடகம் வெளியிட்டது.

நைஜர் அரசுத் தலைவர் பாஸூம் ஜூலை திங்கள் 26ஆம் நாள் முதல் இது வரை, ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய இராணுவப் படையினரால் தடைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய வட்டாரத்தை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது, அந்நாட்டில் சுமார் 1500 பிரெஞ்சு இராணுவப் படையினர்கள் உள்ளனர். செப்டம்பர் 2ஆம் நாளுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான நைஜர் பொது மக்கள் பேரணியை நடத்தி, பிரெஞ்சு இராணுவப் படையினர் நிபந்தனையின்றி அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.