சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு அதிகரிப்பு
2023-09-11 10:18:41

சீனச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கம் 11ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, உள்நாட்டு தேவை விரிவாக்கம், வரி குறைப்பு, தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி மற்றும் மூலதனம் ஊக்குவிப்பு முதலியவை பற்றி தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்தது. சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு ஆகஸ்டில் 89.4 ஆக இருந்து, ஜூலை மாதத்திலிருந்து 0.1 புள்ளி அதிகரித்துள்ளது.

தற்போதைய சிக்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழலில் இதுபோன்ற சிறப்பான சாதனைகளை அடைவது கடினம் என்று இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸீ ஜி தெரிவித்தார்.