மாலத்தீவு அரசுத் தலைவர் தேர்தலுக்கு 2ஆவது சுற்று நடத்த அறிவிப்பு
2023-09-11 10:18:45

மாலத்தீவு தேர்தல் ஆணையம் 10ஆம் நாள் வெளியிட்ட முடிவின்படி, 9ஆம் நாள் நடைபெற்ற மாலத்தீவு அரசுத் தலைவருக்கான வாக்கெடுப்பில் எந்த ஒரு வேட்பாளருக்கும் 50விழுக்காடு ஆதரவு கிடைக்கவில்லை. அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி 2ஆவது சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.

9ஆம் நாள் நடந்த தேர்தலில், 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில், மாலே மாநகராட்சித் தலைவர் முகமது முயிஸ் 46.06விழுக்காட்டு வாக்குகளை பெற்றார். ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 39.05விழுக்காட்டு ஆதர வாக்குகளைப் பெற்றார்.