கியேவில் ஜப்பான் வெளியுறவு அமைச்சரின் பயணம்
2023-09-11 11:05:03

ஜப்பான் ஒலிபரப்புக் சங்கம் வெளியிட்ட செய்தியன் படி, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் லின் ஃபாங்ஷெங் 9ஆம் நாள் கியேவில் திடீரென்று பயணம் மேற்கொண்டு, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபா மற்றும் அரசுத் தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் முறையே பேச்சுவார்த்தைகள் நடத்தினார். கியேவில் ஜப்பான் வெளியுறவு அமைச்சரின் வருகை, இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தார்.