சீனப் பெரிய விமானத் தயாரிப்புக்கான முன்பதிவு என்ணிக்கை ஆயிரத்துக்கு மேல்
2023-09-11 15:07:19

சீனாவின் பெரிய விமானத் தயாரிப்புத் துறை, 15ஆண்டுகால வளர்ச்சியின் மூலம், ஏ.ஆர்.ஜெ.21 ரக பிராந்திய விமானம், சி.919 எனும் நடு மற்றும் குறுகிய தூர பயணியர் விமானம், சி.929எனும் நடு மற்றும் தொலை தூரப் பயணியர் விமானம் உள்ளிட்ட தயாரிப்புகளைச் சீன வணிக ரீதியான விமான லிமிடெட் நிறுவனம் கொண்டுள்ளன என்று இந்நிறுவனத்தின் தலைவர் ஹெ ஷாங் டொங் 10ஆம் நாள் ஞாயிற்றுகிழமையன்று தெரிவித்தார்.

இதில், சி.919 பயணியர் விமானம் கடந்த மே 28ஆம் நாளில் வணிக ரீதியாக இயங்க தொடங்கியுள்ளது. அதற்கான முன்பதிவு எண்ணிக்கை 1061ஐ எட்டியது.

ஏ.ஆர்.ஜெ.21 விமானத்தின் முன்பதவிவு எண்ணிக்கை 775ஐ எட்டியது. வெளிநாட்டில் இந்த விமானத்தை வாங்கிய முதலாவது பயனாளரான இந்தோனேசிய ட்ரான்ஸனுச பயணி சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் ஏ.ஆர்.ஜெ 21 ரக விமானங்களின் மூலம், தற்போதுவரை மொத்தம் 8.6 மில்லியன் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தவிர, தொடக்க வடிவமைப்புக் கட்டத்தில் உள்ள சி.929 பயணி விமானம், 12ஆயிரம் கிரோமீட்டர் தொவைவாக பறக்கக் கூடிய திறன் உடையதாக எதிர்பார்க்கப்படுகின்றது.