சீனாவின் கருத்துக்களை வெளிப்படுத்திய ஜி20 நாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கை
2023-09-11 16:52:24

இந்தியாவில் நடைபெற்ற 18வது ஜி20 உச்சிமாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செப்டம்பர் 11ஆம் நாள் கூறுகையில், ஜி20 நாடுகளின் ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் கருத்துக்களை சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இவ்வுச்சிமாநாட்டில் பன்முகங்களிலும் எடுத்துக்கூறினார். ஜி20 நாடுகள் கையோடு கை கோர்த்து உலகச் சவால்களைச் சாமாளித்து, உலகப் பொருளாதார மீட்சி மற்றும் உலக வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற ஆக்கப்பூர்வமான சமிக்கையை இவ்வுச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட தலைவர்களின் கூட்டறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

மேலும், ஜி20 அமைப்பின் பணிகளுக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் மற்றும் ஆதரவு அளித்து வருகிறது. நடப்பு உச்சிமாநாட்டுக்கான ஆயத்தப் பணியில் சீனா பயன்தரும் பங்காற்றியுள்ளது என்றும் மாவ் நிங் தெரிவித்தார்.