பெய்ஜிங்கில் 18ஆவது உலகத் தண்ணீர் மாநாடு துவக்கம்
2023-09-11 19:29:08

18ஆவது உலகத் தண்ணீர் மாநாடு பெய்ஜிங்கில் திங்கள்கிழமை துவங்கியது. அனைவருக்கும் நீர் – மனிதன்-இயற்கை இடையே இணக்கம் என்பது 5 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தலைப்பாகும். இம்மாநாட்டை சீனா நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள், 130-க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகள் மற்றும் நீர்-தொடர்பான நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த நீர் மூலவள நிபுணர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 

மாநாட்டின் துவக்க விழாவில் சீன நீர்வளத் துறை அமைச்சர் லி குவோயிங் கூறுகையில், நீர் பேரிடர்கள், நீர் மூலவளங்கள், நீர் சூழலியல் மற்றும் நீர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அறைகூவல்களை உலகம் எதிர்கொண்டுள்ளது. இதுசமயம், நீர் மேலாண்மை மற்றும் வியூகங்கள் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வது முக்கியத்துவமானது என்றார்.

மேலும், இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை நாட வேண்டும் என்றும் உலகளாவிய நீர் நிர்வாகத்துக்கு அனைவரும் இணைந்து தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.