துருக்கி ரஷியாவுடன் தானிய உடன்படிக்கையை எட்டியுள்ளது: எர்டோகன்
2023-09-12 09:55:12

10லட்சம் டன் தானியங்களை ரஷியா துருக்கிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை இரு நாடுகள் இதற்கு முன்பு கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது என்றும், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க செய்யுமாறு, ரஷியா துருக்கியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டதாகவும் துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் 11ஆம் நாள் தெரிவித்தார்.

அதே வேளையில், ரஷியாவின் தானியங்கள் மற்றும் உரத்தைச் சர்வதேச சந்தைக்கு தடையின்றி அனுப்புவதற்கு மேலை நாடுகள் உறுதிமொழியைப் பின்பற்றி உதவியளிக்க வேண்டும். கருங்கடல் தானிய ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் ரஷியாவை ஓரங்கட்டக் கூடாது என்றும் அவர் 10ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.