© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றுவதன் மீது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செப்டம்பர் 12ஆம் நாள் கூறுகையில், ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றுவதற்கு எந்தக் கண்காணிப்பும் அனுமதியையும், இச்செயலுக்கான உரிய தன்மை மற்றும் சட்டப்பூர்வத் தன்மையையும் வழங்க முடியாது. முழு உலகத்துக்கும் அணு மாசுப்பாட்டின் அபாயத்தை இடமாற்றம் செய்வதை ஜப்பான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
மேலும், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் இக்கண்காணிப்பு, இந்நிறுவனச் செயற்குழுவின் அதிகாரம் பெறவில்லை. அத்துடன், உறுப்பு நாடுகள் இது குறித்து முழுமையாக விவாதம் நடத்தவில்லை. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயலகம் ஜப்பானுக்கு வழங்கிய தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் ஆதரவு மட்டுமே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.