ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி குறைவு
2023-09-12 14:15:27

2023ஆம் ஆண்டில்  கோடைகால பொருளாதார முன்னாய்வு அறிக்கையை ஐரோப்பிய ஆணையம் 11ஆம் நாள் வெளியிட்டது. இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோ பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி முன்னாய்வைக் குறைப்பதாக முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2023ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி முன்னாய்வு 1.0% இலிருந்து 0.8% ஆக திருத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி முன்னாய்வு 1.7% இலிருந்து 1.4% ஆகக் குறைக்கப்படும். யூரோ பிரதேசத்தின் 2023ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு 1.1% இலிருந்து 0.8% ஆகக் குறைக்கப்படும். 2024ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு 1.6% இலிருந்து 1.3% ஆகக் குறைக்கப்படும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கோடை மற்றும் அடுத்த சில மாதக் கட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து மந்தமடையும் என்றும், தொழிற்துறை தொடர்ந்து பலவீனமடையும் என்றும், சேவைத் துறையின் வளர்ச்சிப் போக்கு தணிவு அடையும் என்றும் ஆய்வு குறிகாட்டிகள் காட்டுகின்றன. ஆனால், பணவீக்கம் தளர்ந்து, தொழிலாளர் சந்தை மற்றும் உண்மையான வருமானம் படிப்படியாக மீண்டு வருவதால், ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் அடுத்த ஆண்டு மிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.