ரஷியாவுக்குப் புறப்பட்டார் கிம் ஜாங் உன்
2023-09-12 12:08:43

கொரிய மத்திய செய்தி நிறுவனம் 12ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன் 10ஆம் நாள் பிற்பகல், தொடர்வண்டியின் மூலம், பியொங்யாங்கை விட்டுப் புறப்பட்டு, ரஷியாவுக்குச் சென்றார்.

ரஷிய அரசுத் தலைவர் புதின் அழைப்பின் பேரில், ரஷியாவில் கிம் ஜாங் உன் பயணம் மேற்கொள்கின்றார். இப்பயணத்தின் போது, ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் கிம் ஜொங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் 11ஆம் நாள் வெளியிட்டது.