ஈரானின் 600கோடி டாலர் சொத்து முடக்கத்தை விலக்க அமெரிக்கா அறிவிப்பு
2023-09-12 11:37:51

ஈரானின் காவலில் வைக்கப்பட்ட 5 அமெரிக்க குடிமக்களின் விடுவிப்பை பரிமாற்ற, இதற்கு முன்பு 600கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துகள் மீது தடை விதிக்கப்படும் என்ற கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கவும், காவலில் வைக்கப்பட்ட 5 ஈரான் மக்களை விடுவிக்கவும் பைடன் அரசு 11ஆம் நாள் ஒப்புதல் அளித்துள்ளார்.

600கோடி அமெரிக்க டாலரான சொத்துக்கள் தென் கொரியாவின் வங்கியிலிருந்து கத்தார் மைய வங்கிக்கு அனுப்பப்பட அனுமதிக்கப்படுகிறது. சர்வதேச மனிதநேய உதவிப் பொருட்களை ஈரான் வாங்குவதற்கு இது பயன்படும் என்று அமெரிக்க செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.