இலங்கை விவகாரங்கள் குறித்து சீனாவின் நிலைப்பாடு
2023-09-12 15:27:13

ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தின் 54-ஆவது கூட்டத் தொடரில், இலங்கையின் மனித உரிமை நிலை பற்றிய ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர்களின் அறிக்கைக்கான பேச்சுவார்த்தை 11ஆம் நாள் நடைபெற்றது. அப்போது, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி சென் சூ இப்பேச்சுவார்த்தையில் உரைநிகழ்த்தினார். மனித உரிமை பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கையின் முயற்சிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் மன்றம் உரிய பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 51-1 தீர்மானம், நியாயமான, புறநிலையான, தேர்வு இல்லாத கோட்பாட்டை பின்பற்றவில்லை. மேலும், இத்தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை. மனித உரிமை மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றவில்லை. பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் ரீதியான சுந்ததிரத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் மன்றம் மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு உரிய முறையில் பங்காற்ற வேண்டும் என்று சீனா கருதுவதாக அவர் தெரிவித்தார்.