2023 சீன-மத்திய ஆசிய மனித உரிமை வளர்ச்சி மன்றக் கூட்டம் துவக்கம்
2023-09-12 19:13:13

2023 சீன-மத்திய ஆசிய மனித உரிமை வளர்ச்சி மன்றக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானம் மற்றும் மனித உரிமை வளர்ச்சி முன்னேற்றம் என்பது நடப்புக் கூட்டத்தின் தலைப்பாகும். மனித உரிமை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், இளைஞர்களின் பொறுப்பு உள்ளிட்ட கருப்பொருட்களில், இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிபுணர்கள் முன்மொழிவு மற்றும் ஆலோசனைகளை வழங்கி, மனித உரிமை நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு பங்காற்றி வருகின்றனர்.

சீன மனித உரிமை வளர்ச்சி நிதியத்தின் துணைத் தலைவர் வாங் குவோச்சிங் உரை நிகழ்த்துகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 10 ஆண்டுகளில், மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ள சர்வதேச பொது நல தயாரிப்பாகவும், மிகப்பெரிய சர்வதேச ஒத்துழைப்பு தளமாகவும் மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். பட்டுப்பாதை யுகத்தில், மத்திய ஆசிய நாடுகள் உள்பட பன்னாட்டுச் சமூகம் சீனாவுடன் இணைந்து, நாடுகளிடையே பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி, பொது மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் நட்புறவு, நாகரிகங்களிடையே பரஸ்பர கற்றல் ஆகியவற்றைக் கொண்ட புதிய அத்தியாயத்தை உருவாக்குவதை சீனா ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.