ரஷியாவை எதிரியாக கருதுவதை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாது: புதின்
2023-09-13 10:36:48

ரஷிய-உக்ரைன் மோதல் நீண்டகாலமாக நீடிப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் 12ஆம் நாள் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற போது தெரிவித்தார். ஆயுத்த்தாரி, படைக்கலம் மற்றும் வெடிப்பொருட்கள் தீர்ந்தால் மட்டுமே, உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தையை ரஷியா மேற்கொள்ளும் என்றும் புதின் கருத்து தெரிவித்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அன்று தெரிவித்தது.

2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் பற்றி அவர் கூறுகையில், இத்தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும், ரஷியாவுக்கான அமெரிக்காவின் தூதாண்மைக் கொள்கைகளின் திசையில் அடிப்படையான மாற்றம எதுவும் ஏற்படாது எந்றும் அமெரிக்க அரசு ரஷியாவை அதன் எதிரியாக கருதுவதாகவும் புதின் கூறினார்.