சீனத் துறைமுகங்களின் விரைவான வளர்ச்சி
2023-09-13 13:57:57

சீனாவின் துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு கொள்கலன்கள் கையாளுதல் அளவுகள் தொடர்ந்த பல ஆண்டுகளாக உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. சரக்கு கையாளுதல் அளவுக்கான உலகின் முதல் பத்து துறைமுகங்களிலும், சரக்கு கொள்கலன்கள் கையாள்ளுதல் அளவுக்கான உலகின் முதல் பத்து துறைமுகங்களிலும், சீனாவுக்குச் சொந்தமான துறைமுகங்களின் எண்ணிக்கைகள் முறையே 8 மற்றும் 7 ஆக உள்ளது.சீன கப்பல் உரிமையாளர் வைத்திருக்கும் அளவு 24.92 கோடி டன்களை எட்டி, கிரேக்கத்தை முதன்முறையாகத் தாண்டி, உலகின் மிகப்பெரிய அளவிலான கப்பல் உரிமையாளரைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

12ஆம் நாள் செவ்வாய்கிழமையன்று சர்வதேச நீர்வழி போக்குவரத்து கருத்தரங்கில் இது தெரிவிக்கப்பட்டது

தவிரவும், சீனாவின் பல்வேறு முக்கிய நீர்வழி போக்குவரத்து கட்டுமானத் திட்டங்களும் சீராக நடைமுறைக்கு வந்துள்ளன. 2023ஆம் ஆண்டின் முற்பாதியில், நீர்வழி போக்குவரத்து கட்டுமானத்தில் 9360கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 26.7விழுக்காடு அதிகமாகும்.