ஜோ பைடன் மீதான குற்றச்சாட்டு விசாரணையைத் தொடங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கோரிக்கை
2023-09-13 10:53:21


ஜோ பைடன் மீதான குற்றச்சாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரும், குடியரசு கட்சியின் உறுப்பினருமான கெவின் மக்கார்த்தி பிரதிநிதிகள் சபையின் தொடர்புடைய கமிட்டிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாதாக 12ஆம் நாள் தெரிவித்தார்.

ஜோ பைடன்னின் மகன் கன்டார் பைடன் மீது வெளிநாட்டு வர்த்தகப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை செய்தபோது, ஜோ பைடன் கட்டற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியது, நீதி சட்ட செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்தியது, ஊழல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதை பிரதிநிதி சபை கண்டறிந்தது. இது குறித்து பிரதிநிதி சபை குற்றச்சாட்டு விசாரணை தொடங்குவதாக மக்கார்த்தி தெரிவித்தார்.