ஜப்பானின் ஆய்வு நிறுவனம் ஒன்றில் கதிர்வீச்சுப் பொருட்கள் கசிவு
2023-09-13 10:43:12

அண்மையில், கதிர்வீச்சு பொருட்கள் கசிவு நிகழ்வு ஏற்பட்டது என்று ஜப்பானின் அணு ஆற்றல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இப்ராகி மாவட்டத்தின் டோகாய் கிராமத்திலுள்ள அணு எரிபொருள் சுழற்சி பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. மாறாக, இது, பணியாளர்களின் நலவாழ்வு மற்றும் அருகிலுள்ள சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் 12ஆம் நாள் வெளியிட்டது

தற்போது, இக்கசிவு நிகழ்வுக்கான காரணம் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்தது. கதிர்வீச்சுப் பொருட்கள், கைக்கவசப் பெட்டியிலிருந்து வெளியேறக்கூடும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கைக்கவசப் பெட்டி பொதுவாக மூடப்பட்டிருக்கும். 2 ஆண்டுக்கு ஒரு முறை சோதனை மேற்கொள்ளப்படும். இப்பெட்டியில் அணு எரிப் பொருள் உள்ளது. ஆனால், அண்மையில், இப்பெட்டி பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.