சீனாவில் அனைவரையும் உள்ளடக்கும் நிதித்துறைக்கான சிறப்பு விதிமுறை வெளியீடு
2023-09-13 18:48:23

கொள்கை மற்றும் மூலதனப் பயன்பாட்டின் பயன்களை உயர்த்தி, அனைவரையும் உள்ளடக்கும் நிதித்துறையின் உயர்தர வளர்ச்சியை மேம்படுத்தும் விதம், சிறப்பு நிதி மேலாண்மை விதிமுறையின் திருத்தத்தை சீன நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இவ்விதிமுறையின்படி, அனைவரையும் உள்ளடக்கும் நிதித்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவான சிறப்பு பரிமாற்றத் தொகை, மத்திய நிதி மூலம் வழங்கப்பட உள்ளது. தொழில் தொடங்குவதற்குச் சலுகையுடன் கூடிய கடன் வழங்குவது, அனைவரையும் உள்ளடக்கும் நிதித்துறையின் வளர்ச்சிக்கான முன்மாதிரி மண்டலத்தை கட்டமைப்பது, கிராமப்புற நிதி நிறுவனங்களின் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு மானியம் கொடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.

இவ்வாண்டின் அக்டோபர் முதல் நாள் நடைமுறைக்கு வர உள்ள இவ்விதிமுறை 5 ஆண்டுகள் தொடரும்.