லிபியாவில் வெள்ளத்தால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
2023-09-13 11:06:01

உள்ளூர் நேரப்படி 12ஆம் நாள் அல் அரேபியத் தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட செய்தியின் படி, லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

தற்போது, டெர்னாவின் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் பேரழிவு நிவாரண பணி கடினமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.