உலக மேலாண்மைக்கான சீர்திருத்தம் மற்றும் கட்டுமானம் பற்றிய சீனத் திட்டம் வெளியீடு
2023-09-13 16:33:32

உலக மேலாண்மைக்கான சீர்திருத்தம் மற்றும் கட்டுமானம் பற்றிய சீனத் திட்டத்தை வெளியுறவு அமைச்சகம் செப்டம்பர் 13ஆம் நாள் வெளியிட்டது.

இது குறித்து இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில், தற்போது சர்வதேச நிலைமையில் கொந்தளிப்பு மற்றும் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. ஐ.நா சர்வதேச விவகாரங்களில் ஆக்கமுடன் பங்காற்றி, உலக மேலாண்மை அமைப்புமுறையை மேம்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்ப்பார்த்து வருகிறது. அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி, மனித உரிமை, சமூகம் உள்ளிட்ட முக்கிய துறைகளிலுள்ள உலக மேலாண்மையும், நிறுவனங்களின் சீர்திருத்தமும் பற்றிய சீனாவின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்கள் இத்திட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன என்றார்.