ரஷிய-சீன வணிகப் பேச்சுவார்த்தை
2023-09-13 17:05:34

8ஆவது கீழை பொருளாதார மன்றக் கூட்டத்தின் கீழுள்ள ரஷிய-சீன வணிகப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 12ஆம் நாள் ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபற்றது. இருநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கட்டமைப்பின் பலதுருவமயமாக்கலை முன்னேற்றுவது, தூரக் கிழக்குப் பகுதியில் இருநாடுகளின் முதலீடு மற்றும் தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி இருதரப்புப் பிரதிநிதிகள் விவாதம் நடத்தி, இருநாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆசிய-பசிபிக் பிரதேச நாடுகளுடனான தொடர்புகளை வலுப்படுத்த, 2015ஆம் ஆண்டிலிருந்து ரஷியா தூரக் கிழக்குப் பகுதியில் கீழை பொருளாதார மன்றக் கூட்டம் நடத்தி வருகிறது. 8ஆவது கீழை பொருளாதார மன்றக் கூட்டம், “ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்புக்கான பாதை” என்ற தலைப்பில், செப்டம்பர் 10 முதல் 13ஆம் நாள் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்றது.