பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2023-09-14 19:58:54

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டான் கேஃபேய் செப்டம்பர் 14ஆம் நாள் இராணுவம் பற்றிய தகவல்களை வெளியிட்ட போது, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையை அமெரிக்கா சீர்குலைப்பதை சீனா உறுதியுடன் எதிர்ப்பதாகக் கூறினார்.

பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா தென் சீனக் கடலில் மேற்கொண்ட கூட்டு சுற்றுக் கண்காணிப்புப் பயணம் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அமெரிக்கா சொந்த சுயநலனுக்கு தென் சீனக் கடல் பிரச்சினையில் தலையிடுவதை சீனா உறுதியாக எதிர்ப்பதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் கடல் சார் உரிமையை சீன இராணுவம் எப்போதுமே பேணிக்காப்பதாகவும் தெரிவித்தார்.

தவிரவும், தைவானுடன் இராணுவத் தொடர்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இது குறித்து டான் கேஃபேய் கூறுகையில், சீனாவின் தைவானுடன் அமெரிக்காவின் எந்த வடிவிலான அதிகாரப்பூர்வப் பரிமாற்றத்தையும் இராணுவத் தொடர்பையும் சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. அமெரிக்காவுடனான தொடர்பு, தைவானை ஆபத்தான நிலைக்கு தள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.