அமெரிக்க ஆப்பிள்கள் மீதான வரியை குறைப்பது உள்நாட்டு விற்பனையை பாதிக்காது: இந்திய மத்திய அரசு
2023-09-14 16:31:08

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்கள் மீதான 20 சதவீத சுங்க வரியை குறைக்கும் நடவடிக்கை, இந்தியாவில் விளைவிக்கப்படும் ஆப்பிள்களின் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை என்று இந்திய வணிகத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பியூஷ் குமார் செவ்வாய்கிழமையன்று தெரிவித்தார்.

ஆப்பிள் விவசாயிகளின் கவலையைக் குறைக்கும் வகையில் பியூஷ் குமார் கூறுகையில், அமெரிக்க ஆப்பிள்களுக்கு 20சதவீத வரியைக் குறைப்பதில், இந்தியா அமெரிக்காவுக்கு கூடுதலாக எதையும் கொடுக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆப்பிள் பழங்களின் அறுவடைகாலம் வரவுள்ளது. இதை முன்னிட்டு, அமெரிக்க ஆப்பிள்கள் இந்தியச் சந்தையில் விலை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய ஆப்பிள்களின் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று ஆப்பிள் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.