உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை
2023-09-14 14:26:16

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் அண்மையில் எச்சரித்துள்ளது. உணவு உதவியில் ஒவ்வொரு 1% குறைப்புக்கும், 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பசியின் விளிம்பிற்கு தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12ஆம் நாளிரவு வெளியிட்ட செய்தியின் படி, சர்வதேச மனித நேய நிதியின் வீழ்ச்சியால், ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் பெரும்பாலான உதவி நடவடிக்கைகளுக்கான உணவுப் பொருட்களைப் பெரிய அளவில் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் நிபுணர் ஒருவரின் முன்மதிப்பீட்டின் படி, அடுத்த 12 மாதங்களில் அவசரகால பசியில் சிக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 40 இலட்சமாக அதிகரிக்க இந்நிலைமை வழிவகுக்கும் என்றார்.