அரை மின் கடத்தி தொழிற்துறையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு சீனா பதில்
2023-09-14 19:05:56

அமெரிக்காவின் திறன்மிக்க மற்றும் அதிநவீன சில்லுகள் சீனாவுக்கு விற்பனை செய்யப்படாது என்று அமெரிக்க வணிக அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாதொங் 14ஆம் நாள் கூறுகையில், சீன-அமெரிக்க அரை மின் கடத்தி தொழிற்துறையின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்தை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவது, வேறு நாடுகளின் நலன்களைச் சீர்குலைப்பதோடு, சொந்த நாட்டிற்கும் நன்மை தராது. திறப்பு அளவைச் சீனா தொடர்ந்து அதிகரித்து, உலக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றத்தையும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும் முன்னேற்றும் என்றார்.