சூடான் பிரச்சினைக்குப் பொறுப்பான ஐ.நா தலைமைச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி பதவி விலகல்
2023-09-14 15:01:59

சூடான் பிரச்சினைக்குப் பொறுப்பான ஐ.நா தலைமைச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வோல்கர் பெர்த்ஸ் உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் 13ஆம் நாள், ஐ.நா பாதுகாப்பவையில் சூடான் நிலைமை பற்றிய சுருக்கமான அறிக்கையை வழங்கினார். இதனிடையே, சிறப்புப் பிரதிநிதி பதவியிலிருந்து விலகுவார் என குட்ரெஸிடம் தெரிவித்துள்ளதாக வோல்கர் பெர்த்ஸ் கூறினார். இதனையடுத்து, வோல்கர் பெர்த்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக குட்ரெஸ் தெரிவித்தார். இவ்வாண்டின் ஏப்ரல் 15ஆம் நாள் சூடான் நாட்டின் இராணுவத்திற்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்து வருகிறது. வோல்கர் பெர்த்ஸை, வரவேற்கப்படாத நபராக அறிவிக்க, இவ்வாண்டின் ஜூன் திங்களில், சூடான் அரசு ஐ.நாவிடம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.