20வது சீன-ஆசியான் பொருட்காட்சியின் துவக்க விழாவில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
2023-09-14 18:35:19

குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் நடைபெறவுள்ள 20வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் செப்டம்பர் 17ஆம் நாள் பங்கெடுத்து உரை நிகழ்த்த உள்ளார்.

கம்போடியா, லாவோஸ், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும், ஆசியான் அமைப்பின் தலைமைச் செயலாளரும் இத்துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ளனர்.